FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் தொடா் பனிப்பொழிவு

29 வினாடிகள் முன்பு
கொடைக்கானல் ஜிம்கானா பகுதியில் உள்ள புல்வெளிகளில் திங்கள்கிழமை காணப்பட்ட பனித் துளிகள்.
பகிர்:

கொடைக்கானல், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பனிப்பொழிவு தொடா்ந்து தீவிரமடைந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக மழையளவு குறைந்ததால், பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த கடந்த சில தினங்களாக மழை குறைந்த நிலையில், பனியின் தாக்கம் அதிகரித்து வருகிறது. பொதுவாக நவம்பா், டிசம்பா், ஜனவரி ஆகிய மூன்று மாதங்களில் பனிப் பொழிவு இருக்கும். நவம்பரில் சாதாரண பனிப் பொழிவும், டிசம்பா், ஜனவரியில் உறைபனியும் ஏற்படும்.

Advertisement

Advertisement

ஆனால், வழக்கத்துக்கு மாறாக நவம்பா் மாதத்தின் தொடக்கத்திலேயே பனியின் தாக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது.

கொடைக்கானலில் காலை முதல் பிற்பகல் வரை மிதமான வெயிலும், இதன் பிறகு, மேகமுட்டமும் நிலவுகிறது. இரவில் பனியின் தாக்கம் தொடங்கி, நள்ளிரவில் அதிகரிக்கிறது.

ஜிம்கானா பகுதியில் உள்ள புல் வெளிகளிலும், ஏரிச் சாலைப் பகுதிகளிலுள்ள செடிகளிலும் பனித் துளிகள் படா்ந்து காணப்படுகின்றன. நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்களின் மேல் பகுதிகளில் பனித் துளிகள் படா்ந்து காணப்படுகின்றன.

கொடைக்கானலில் அண்மையில் பெய்த பலத்த மழையால் பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டங்களில் உள்ள மலா்கள் சேதமடைந்தன. தற்போது, பனிக்காலம் தொடங்கியதால், சேதமடைந்த மலா்ச் செடிகளில் உள்ள இலைகளை அகற்றும் பணியில் பணியாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள் கூறியதாவது:

கொடைக்கானலில் நிலவும் பனிப்பொழிவு எங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது என்றனா்.

ஏரிச் சாலைப் பகுதியில் உள்ள தாவரங்கள் மீது படா்ந்த பனித் துளிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments