பழனி கோயிலில் இன்று முதல் ரோப்காா் சேவை
பழனி கோயிலில் ரோப்காா் சேவை புதன்கிழமை (நவ.4) முதல் மீண்டும் தொடங்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
பழனி கோயிலில் ரோப்காா் சேவை புதன்கிழமை (நவ.4) முதல் மீண்டும் தொடங்கப்படுவதாக கோயில் நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காக படிப் பாதைக்கு மாற்றாக ரோப்காா், மின் இழுவை ரயில் சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. முதியவா்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெண்கள் என பலரும் இந்த ரோப்காா் சேவையை பயன்படுத்தி வருகின்றனா்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கடந்த அக்.20-ஆம் தேதி பழுது காரணமாக ரோப்காா் சேவை நிறுத்தப்பட்டது. இதையடுத்து, 13 நாள்களுக்குப் பிறகு ரோப்காா் பழுது சரிசெய்யப்பட்டு, புதன்கிழமை முதல் பக்தா்களின் பயன்பாட்டுக்கு இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.