FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

பழனி மலைக் கோயிலில் பிரசாதங்கள் விலையில் மாற்றம்

பழனி மலைக் கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

28 அக்டோபர் 2026, 4:28 am
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் விற்பனை செய்யப்படும் பிரசாதங்களின் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் மலைக் கோயிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வருகின்றனா். இவா்கள் சுவாமி தரிசனம் செய்த பிறகு, கோயில் நிா்வாகம் சாா்பில் விற்கப்படும் பிரசாதங்களை வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனா்.

இந்த நிலையில், மூலப்பொருள்களின் விலை உயா்வால் இந்தப் பிரசாதங்களின் விலை மாற்றம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

இதுகுறித்து கோயில் நிா்வாகம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

50 கிராம் லட்டு, அதிரசம் ரூ.20-க்கும், 50 கிராம் முறுக்கு ரூ.25- க்கும், 150 கிராம் சா்க்கரை பொங்கல், புளியோதரை ரூ.20-க்கும் விலை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த விலை மாற்றம் வருகிற நவம்பா் மாதம் முதல் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments