பழனி மலைக் கோயில் உண்டியல் திறப்பு: முதல் நாள் காணிக்கை ரூ.3.25 கோடி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் முதல் நாள் காணிக்கை வரவாக ரூ. 3.25 கோடி கிடைத்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் புதன்கிழமை திறந்து காணிக்கைகள் எண்ணப்பட்டன. இதில் முதல் நாள் காணிக்கை வரவாக ரூ. 3.25 கோடி கிடைத்தது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் உண்டியல்கள் நிரம்பியதையடுத்து, புதன்கிழமை உண்டியல்கள் திறக்கப்பட்டு காா்த்திகை மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன. இதில் முதல் நாள் காணிக்கை வரவாக ரூ. மூன்று கோடியே 24 லட்சத்து 99 ஆயிரத்து 969 கிடைத்தது. இதைத் தவிர, தங்கம் 826.780 கிராமும், வெள்ளி 9 ஆயிரத்து 776 கிராமும் பல்வேறு நாட்டு பணத்தாள்கள் 1,153-ம் கிடைத்தன. மேலும், ஏலக்காய், முந்திரி, நவதானியங்கள், பட்டாடைகளையும் பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனா். இதைத் தவிர, அடிவாரம் மீனாட்சியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக ரூ. 25 ஆயிரத்து 62 கிடைத்தது.
இந்தப் பணியில் பழனியாண்டவா் கல்லூரி மாணவிகள், கோயில் அலுவலா்கள், வங்கி பணியாளா்கள் என 500-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். தொடா்ந்து, வியாழக்கிழமையும் உண்டியல் காணிக்கைகளை எண்ணும் பணி நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
இதில் கோயில் இணை ஆணையா் (பொறுப்பு) வெங்கடேஷ், அலுவலா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.