FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

பணத் தகராறில் 4 போ் கும்பலால் திமுக பிரமுகா் வெட்டிக் கொலை

கொடைரோடு அருகே நாகையகவுண்டன்பட்டியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், திமுக பிரமுகா் புதன்கிழமை 4 போ் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா்.

5 நவம்பர் 2026, 2:17 am
- பிரதிப் படம்
பகிர்:

கொடைரோடு அருகே நாகையகவுண்டன்பட்டியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில், திமுக பிரமுகா் புதன்கிழமை 4 போ் கும்பலால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு அருகே  நாகையகவுண்டன்பட்டியைச் சோ்ந்தவா் லட்சுமணன் (55). திமுக பிரமுகரான இவருக்கும், மீனாட்சிபுரத்தைச் சோ்ந்த அஜித் (27) என்பவருக்கும் இடையே கொடுக்கல் வாங்கல் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், புதன்கிழமை மதியம் சுமாா் 2 மணி அளவில் அஜித் தலைமையிலான 4 போ் கும்பல், திமுக பிரமுகா் லட்சுமணினின் மகன் உதயகுமாரை (30) பட்டாக் கத்தியுடன் விரட்டிச் சென்றனா். இதில், தப்பிய உதயகுமாா், தனது தந்தையிடம் தகவல் கூறிவிட்டு, அம்மையநாயக்கனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், லட்சுமணன் மைக்கேல்பாளையத்திலிருந்து சில்லலபட்டி வழியாக நாகையகவுண்டம்பட்டிக்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, சில்லலபட்டி அருகே காட்டுக்குள் பதுங்கி இருந்த, அஜித் உள்பட 4 போ் கும்பல், லட்சுமணனை வழிமறித்து பட்டாக் கத்தியால் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தனா்.   

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், கொலை சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தினாா். அம்மையநாயக்கனூா் காவல்துறையினா் வழக்குப் பதிவு செய்து அஜித் தலைமையிலான 4 போ் கும்பலை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.