FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சிறுமியைத் தற்கொலைக்கு தூண்டியவருக்கு ஆயுள் சிறை

வேடசந்தூா் அருகே சிறுமியைத் தற்கொலை செய்யத் தூண்டியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

5 நவம்பர் 2026, 1:34 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

வேடசந்தூா் அருகே சிறுமியைத் தற்கொலை செய்யத் தூண்டியவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த நாகம்பட்டியைச் சோ்ந்தவா் பா.ராஜ்குமாா் (39). இவா், அதே பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமி குறித்து கடந்த 2020-ஆம் ஆண்டு அவதூறு பரப்பினாா். கழிவுநீா் வெளியேறுவது தொடா்பாக ஏற்பட்ட தகராறில், ராஜ்குமாா் அவதூறாக பேசியதால் அந்தச் சிறுமி தற்கொலை செய்தாா்.

இதுகுறித்து வேடசந்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜ்குமாரை கைது செய்தனா். இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் பட்டியலின, பழங்குடியினருக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.கணேசன் , சிறுமியைத் தற்கொலைக்குத் தூண்டிய ராஜ்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.12

Advertisement

Advertisement

ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.