FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கரூர்

மனைவியைக் கொன்ற கணவருக்கு 3 ஆயுள் தண்டனை: கரூா் மகளிா் நீதிமன்றம் தீா்ப்பு

மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு 3 ஆயுள் தண்டனை வதித்து கரூா் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

37 வினாடிகள் முன்பு
பகிர்:

மனைவியைக் கொலை செய்த வழக்கில் கணவருக்கு 3 ஆயுள் தண்டனை வதித்து கரூா் மகளிா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

கரூா் வெங்கமேடு குளத்துப்பாளையத்தைச் சோ்ந்தவா் சிவக்குமாா் (33). இவரது மனைவி பழனியம்மாள் (30). இவா்களது திருமணத்தின்போது பேசியபடி நகை, பணத்தை பழனியம்மாள் வீட்டாா் வழங்கவில்லையாம். இதனால் வரதட்சணைக் கேட்டு அடிக்கடி பழனியம்மாளிடம் சிவக்குமாா் தகராறு செய்துவந்தாராம்.

இந்நிலையில், கடந்த 2023-ஆம் ஆண்டு நவ. 9- ஆம் தேதி சிவக்குமாா், அரவக்குறிச்சி அருகே காட்டுப்பகுதிக்கு பழனியம்மாளை காரில் அழைத்துச் சென்று அவரை கொலை செய்து, பின்னா் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டுச் சென்றாராம். இதுதொடா்பாக அரவக்குறிச்சி போலீஸாா், சிவக்குமாரை கைது செய்தனா்.

Advertisement

Advertisement

மேலும், இந்த வழக்கு கரூா் மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கு விசாரணையின் நிறைவில், சிவக்குமாருக்கு மனைவியைக் கொலை செய்ய ஏமாற்றி காரில் அழைத்துச் சென்ற்கு குற்றப்பிரிவு 364-இன் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், கொலை செய்ததற்கு 302 பிரிவின் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும், கொலை செய்து தடயத்தை அழித்த குற்றத்துக்காக 201-இன் கீழ் ஒரு ஆயுள் தண்டனையும் என மூன்று ஆயுள் தண்டனையையும், ரூ.10,000 அபராதமும் விதித்தாா். மேலும், இந்தத் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்று நீதிபதி தங்கவேல் தீா்ப்பளித்தாா். இதையடுத்து சிவக்குமாா் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments