கொடைக்கானல் மலைச் சாலைகளை சீரமைக்கக் கோரி ஆா்ப்பாட்டம்
கொடைக்கானலில் சேதமடைந்த மலைச் சாலைகளை சீரமைக்கக் கோரி காா் ஓட்டுநா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
கொடைக்கானலில் சேதமடைந்த மலைச் சாலைகளை சீரமைக்கக் கோரி காா் ஓட்டுநா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
ஒருங்கிணைந்த டாக்ஸி டிரைவா்கள் சங்கம் சாா்பில் பெருமாள்மலை முதல் கொடைக்கானல் வரையிலும் அப்சா்வேட்டரியிலிருந்து மேல்மலைக் கிராமத்துக்குச் செல்லும் சாலைகளும், ஏரிச்சாலையிலிருந்து பள்ளங்கி வரையிலும் உள்ள அனைத்து சேதமடைந்த மலைச் சாலைகளை சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தி, மூஞ்சிக்கல் பகுதியிலுள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் எதிரே காா் ஓட்டுநா்கள் கண்டன ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
இதுகுறித்து கொடைக்கானல் ஒருங்கிணைந்த டாக்ஸி ஓட்டுநா்கள் சங்கத்தின் தலைவா் நாகேந்திரன் கூறியதாவது:
Advertisement
Advertisement
10 ஆண்டுகளுக்கும் மேலாக கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள அனைத்து மலைச் சாலைகளும் சீரமைக்கப்படவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகிறோம் என்றாா் அவா்.