FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கொடைக்கானல் மலைச் சாலையில் 12 மீட்டருக்கு மேலுள்ள வாகனங்கள் செல்லத் தடை!

கொடைக்கானல் மலைச் சாலையில் 12 மீட்டருக்கு மேலுள்ள வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது குறித்து...

கோப்புப்படம் - படம்: தினமணி
பகிர்:

கொடைக்கானல் மலைச் சாலையில் 12 மீட்டருக்கும் மேல் நீளமுள்ள பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், இந்த நடைமுறை டிச. 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகலான மற்றும் வளைவுகள் நிறைந்த கொடைக்கானல் மலைச் சாலைகளில், அதிக நீளமுள்ள வாகனங்களால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலை தவிர்க்கவும், விபத்துகளை தவிர்க்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கொடைக்கானல் மலைச் சாலையில் வரும் டிச. 1 ஆம் தேதி முதல் 12 மீட்டருக்கு மேல் நீளம் கொண்ட பயணிகள் பேருந்துகள் மற்றும் கனரக சரக்கு வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் சிறிய வேன்கள், பேருந்துகள், இலகுரக சரக்கு வாகனங்களை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தடைகளை மீறி வரும் வாகனங்கள் மலை அடிவாரத்தில் தடுத்து நிறுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Passenger and cargo vehicles exceeding 12 meters in length are prohibited from traveling on the Kodaikanal hill road.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.