கொடைக்கானல் மலைச் சாலையில் மண் சரிவு! போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் மலைச் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு....
கொடைக்கானல் பகுதியில் பெய்த தொடர் கனமழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழையால் கோவை, நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் ஏற்கெனவே பெய்த கனமழையால் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கொடைக்கானல் மலைச் சாலையில் தாண்டிக்குடி பகுதியில் 3 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெரும்பாறை, தாண்டிக்குடி, ஆடலூர் ஆகிய கிராமங்களுக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.
மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் அருவி போல் தண்ணீர் கொட்டுவதால் மலைப் பாதையில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனைச் சரி செய்யும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் இப்பகுதிகளுக்கு மக்கள் சுற்றுலா செல்வதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Landslide on Kodaikanal mountain road; Traffic disrupted
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.