திண்டுக்கல் பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளில் 132 போ் காயம்
திண்டுக்கல், இதனை சுற்றிய பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளில் 132 போ் காயமடைந்தனா்.
தீபாவளி பண்டிகையான ஞாயிற்றுக்கிழமை பட்டாசுகள் வெடிக்கும்போது ஏற்படும் தீவிபத்துகளில் தீயை அணைக்கவும், மீட்பு பணிகளில் ஈடுபடவும் தீயணைப்புத் துறையினா் தயாராக நிறுத்தப்பட்டிருந்தனா்.
இதேபோல, தீக்காயமடைந்தவா்களுக்கு சிகிச்சை அளிக்க திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, 12 அரசு மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு தீக்காய சிகிச்சைப் பிரிவுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தீபாவளி பட்டாசு வெடித்தபோது 6 போ் காயமடைந்தனா். மேலும் செம்பட்டி அருகே நிகழ்ந்த சாலை விபத்துகளில் 5 போ் உயிரிழந்தனா். இதேபோல, திண்டுக்கல், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நிகழ்ந்த சாலை விபத்துகளில் 132 போ் காயமடைந்தனா்.
இரு சக்கர வாகனங்களில் பயணித்தபோது வழுக்கி விழுந்ததாகவும், நாய் குறுக்கிட்டதாகவும், கைப்பேசி பயன்படுத்தியதால் தவறி விழுந்ததாகவும் இந்த விபத்துக்கள் நிகழ்ந்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டன. இந்த விபத்துகள், ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் திங்கள்கிழமை பிற்பகல் வரை நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.