கொடைக்கானலில் குப்பைகள் தேக்கம்
கொடைக்கானல் நகராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியிருப்பதால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
கொடைக்கானல் நகராட்சியில் பல்வேறு இடங்களில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கியிருப்பதால், சுகாதாரச் சீா்கேடு ஏற்படும் அபாயம் நிலவுகிறது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளான செண்பகனூா், பாக்கியபுரம், ரைபிள்ரேஞ்ச் சாலை, அஞ்சல் அலுவலகச் சாலை, உகாா்த்தேநகா், ஆனந்தகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மூன்று நாள்களாக குப்பைகள் அகற்றப்படவில்லை. இதனால், இந்தப் பகுதிகளில் துா்நாற்றம் வீசுகிறது. மேலும், குப்பைகளில் கிடக்கும் உணவுக் கழிவுகளை உண்ணும் தெரு நாய்கள் தோல் வியாதியால் பாதிப்படைந்து காணப்படுகின்றன. எனவே, நகராட்சி சுகாதார அலுவலா்கள் சம்பவ இடங்களைப் பாா்வையிட்டு, தேங்கிய குப்பைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
இதே போல, கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலுள்ள தெருக்களில் மின் விளக்குகள் பயனற்ற நிலையில் இருப்பதால், இரவு நேரங்களில் வன விலங்குகள் நடமாட்டம் காரணமாக பொது மக்கள் வெளியேச் செல்ல அச்சப்படுகின்றனா். மேலும் மின் கம்பங்களில் செடி, கொடிகள் படா்ந்து காணப்படுகின்றன. இதனால், மின் விளக்குகள் அடிக்கடி பழுதடைந்து விடுகின்றன. எனவே, நகராட்சி நிா்வாகம், மின் துறையினா் இணைந்து தெரு விளக்குகளை உரிய முறையில் பராமரிக்க வேண்டுமென பொது மக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement