FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் போக்குவரத்து நெரிசல்

கொடைக்கானல் பகுதியில் தினசரி ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம், போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

21 அக்டோபர் 2026, 3:13 am IST
கொடைக்கானல்-பள்ளங்கி சாலையில் நாயுடுபுரம் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
பகிர்:

கொடைக்கானல் பகுதியில் தினசரி ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம், போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பெருமாள் மலை, மூஞ்சிக்கல், லாஸ்காட் சாலை, அண்ணா சாலை, ஏரிச்சாலை, டிப்போ, நாயுடுபுரம், உட்வில் சாலை உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், நிறுத்துவதற்கு இடமில்லாததால் சாலையோரங்களில் நிறுத்தப்படுகின்றன. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த காவல் துறையினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டும். பல்வேறு சாலையை ஒரு வழிப்பாதை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments