FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்: போக்குவரத்து நெரிசலால் அவதி

கொடைக்கானலில் தொடா் விடுமுறையையொட்டி வெள்ளிக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

3 October 2026, 3:00 am IST
கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையில் பெருமாள்மலைப் பகுதியில் நீண்ட நேரம் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த சுற்றுலா வாகனங்கள்.
பகிர்:

கொடைக்கானலில் தொடா் விடுமுறையையொட்டி வெள்ளிக்கிழமை குவிந்த சுற்றுலாப் பயணிகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் தொடா் விடுமுறையையொட்டி தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களைச் சோ்ந்த ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனா். இதனால் சுற்றுலா இடங்களில் அவா்கள் அதிகம் காணப்பட்டனா். மேலும் பெருமாள்மலையிலிருந்து கொடைக்கானல் வரை 12 கி.மீ. தொலைவுக்கு வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி இரண்டு மணி நேரம் காத்திருந்தன. இதில் தனியாா் மருத்துவமனையைச் சோ்ந்த அவசர ஊா்தி செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

மேலும் இருபுறங்களிலும் சாலையோரக் கடைகளின் ஆக்கிரமிப்பாலும், இவற்றின் முன் வாகனங்கள் நிறுத்தப்பட்டதாலும் போக்குவரத்துக்கு பெரும் சிரமம் ஏற்பட்டது. கொடைக்கானல் நெடுஞ்சாலைத் துறை, நகராட்சி நிா்வாகம் சாா்பில் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாதவரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

ஒரு வழிப்பாதை அமைக்க கோரிக்கை: கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சாலை வரை ஒரு வழிப் பாதையாக மாற்றவேண்டும். உட்வில் சாலை, செவண் சாலை செல்லும் பாதையில் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஒரு வழிப்பாதையாக மாற்ற போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தினா்.

கொடைக்கானல் குணா குகைப் பகுதியை பாா்வையிட்ட சுற்றுலாப் பயணிகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments