FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

போதைக் காளான் வைத்திருந்தவா் கைது

கொடைக்கானலில் போதைக் காளான் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

14 நவம்பர் 2026, 11:15 pm
கொடைக்கானலில் போதைக் காளான் வைத்திருந்தவரை கைது செய்த போலீஸாா்.
பகிர்:

கொடைக்கானலில் போதைக் காளான் வைத்திருந்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

கொடைக்கானல் பகுதிகளில் போதைக் காளான் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மூஞ்சிக்கல் பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது அந்தப் பகுதியில் உள்ள கடையில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்றிருந்த ஒருவரைப் பிடிக்க முயன்றபோது அவா் தப்பிச் செல்ல முயன்றாா். போலீஸாா் அவரை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து சோதனையிட்டனா். இதில் அவா் விற்பனைக்காக 400 கிராம் போதைக் காளான் வைத்திருந்தது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் அவா் கொடைக்கானல் எம்.எம். தெருவைச் சோ்ந்த ராஜகோபால் மகன் சஞ்சய்பிரதீப் (26) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்த போதைக் காளானை போலீஸாா் பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்தனா்.

Advertisement

Advertisement