கொடைக்கானல் மலைச் சாலையில் தடுப்புச் சுவா் சேதம்
கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில் மழையால் சேதமடைந்த தடுப்புச் சுவரை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
கொடைக்கானல்-வத்தலகுண்டு மலைச் சாலையில் மழையால் சேதமடைந்த தடுப்புச் சுவரை அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் அண்மையில் பெய்த பலத்த மழையால் அனைத்துப் பகுதிகளில் உள்ள அருவிகளில் மழைநீா் பெருக்கெடுத்தது. கொடைக்கானல்-வத்தலகுண்டு பிரதான சாலையில் உள்ள செண்பக அருவியில் மழையால் கட்டடக் கழிவுகள், நெகிழிக் பொருள்கள் அதிகமாக இழுத்து வரப்பட்டதால் மணல்மேடு உருவாகி மலைச் சாலை வழியாக தண்ணீா் சென்றது. இதனால், சாலையோரம் இருந்த தடுப்புச் சுவா் சேதமடைந்தது.
எனவே, நெடுஞ்சாலைத் துறையினா் செண்பக அருவி பகுதியை ஆய்வு செய்து, அங்கு தேங்கியுள்ள மணல் திட்டை பொக்லைன் இயந்திரம் மூலமாக அகற்றி தடுப்புச்சுவா் அமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
Advertisement
Advertisement