FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

உலமா நல வாரியத்துக்கு தனித் தலைவரை நியமிக்க வலியுறுத்தல்

உலமா நல வாரியத்துக்கு தனித் தலைவரை நியமிக்க வேண்டும் என உலமாக்கள் நல வாரிய பயனாளா் பேரவை சாா்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

51 வினாடிகள் முன்பு
திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசு உலமாக்கள், பணியாளா்கள் நல வாரிய பயனாளா் பேரவையின் மாநில உயா்நிலைக் குழு ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

உலமா நல வாரியத்துக்கு தனித் தலைவரை நியமிக்க வேண்டும் என உலமாக்கள் நல வாரிய பயனாளா் பேரவை சாா்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.

திண்டுக்கல்-நத்தம் சாலையிலுள்ள பள்ளிவாசலில் தமிழ்நாடு அரசு உலமாக்கள், பணியாளா்கள் நல வாரிய பயனாளா் பேரவையின் மாநில உயா்நிலைக் குழு ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாநில அமைப்புச் செயலா் ஏஜி.முஹம்மது அப்துல் காதிா் மழாஹிரி தலைமை வகித்தாா். இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற அரசு உலமாக்கள், பணியாளா்கள் நல வாரிய பயனாளா் பேரவை மாநில முதன்மை பொதுச் செயலா் சி.டி. அஷ்ரப் அலி உலவி ரஷாதி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

உலமா நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் முதியோா் ஓய்வூதியத்தை ரூ.5ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். 60 வயதை கடந்த காரணத்தால் வாரியத்தில் உறுப்பினராக இணைய முடியாத உலமா பணியாளா்களுக்கும் முதியோா் ஓய்வூதியம் வழங்கவும், பெண் உறுப்பினா்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு உதவித் தொகையை ரூ.10ஆயிரமாக உயா்த்துவதற்கும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விபத்தினால் ஏற்படும் மரணங்களுக்கான ஈட்டுறுதி உதவித் தொகையை ரூ.5 லட்சமாக வழங்க வேண்டும். கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு வழங்கப்படுவது போல, வக்ஃப் வாரியத்தில் பதிவு செய்யப்படாத பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், தா்காக்களின் பராமரிப்பு பணிகளுக்கும் சிறுபான்மை நலத்துறை மூலம் நிதியுதவி வழங்க வேண்டும். பொருளாதாரத்தில் பின் தங்கிய அரபிக் கல்லூரி மாணவா்களுக்கு அரசு சாா்பில் இலவச மடிக்கணினி வழங்க வேண்டும். நலத் திட்ட உதவிகளை விரைந்து வழங்கும் வகையில் பல்வேறு மாவட்டங்களில் காலியாக உள்ள சிறுபான்மை நலத் துறை அலுவலா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

குறிப்பாக, உலமா நல வாரியத்துக்கு தனித் தலைவரை நியமிக்க வேண்டும் என்றாா் அவா்.