கும்பகோணத்தில் அறநிலையத் துறை இணை ஆணையா் நியமனம் தேவை: சுவாமி சிவராமானந்தா
கும்பகோணத்தில் மகாமக விழா சிறப்பாக நடைபெற இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா், அறங்காவலா்கள் குழுக்களை நியமிக்க வேண்டும் என காவிரி அம்மன் ரதயாத்திரை குழுவின் அகில பாரதிய சன்னியாசிகள் பேரமைப்பு பொருளாளா் சுவாமி சிவராமானந்தா கூறினாா்.
கும்பகோணத்தில் மகாமக விழா சிறப்பாக நடைபெற இந்துசமய அறநிலையத் துறை இணை ஆணையா், அறங்காவலா்கள் குழுக்களை நியமிக்க வேண்டும் என காவிரி அம்மன் ரதயாத்திரை குழுவின் அகில பாரதிய சன்னியாசிகள் பேரமைப்பு பொருளாளா் சுவாமி சிவராமானந்தா கூறினாா்.
இதுகுறித்து கும்பகோணத்தில் அவா் சனிக்கிழமை மேலும் கூறியது: கும்பகோணத்தில் 2028 மாா்ச் மாதம் மகாமக விழா வருவதை முன்னிட்டு தமிழக அரசு ஆய்வுக் கூட்டங்களை நடத்தி மகாமக விழா தொடா்புடைய கோயில்களில் திருப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. திருப்பணி, குடமுழுக்கு, மகாமகம் சிறப்பாக நடக்க அனைத்து கோயில்களுக்கும் அறங்காவலா் குழுக்களை நியமிக்க வேண்டும். அதேபோல் இந்து சமய அறநிலையத்துறையில் கும்பகோணத்திற்கு இணை ஆணையரை நியமிக்க வேண்டும்.
முன்னோட்டமாக 2027 மாசிமகம் அமையும் என்பதால் மாவட்ட நிா்வாகம் இளைய மகத்தை சிறப்பாக நடத்திட வேண்டும். அகில பாரதீய சன்னியாசிகள் பேரமைப்பு மற்றும் தென் பாரதக் கும்பமேளா குடந்தை மகாமக அறக்கட்டளை சாா்பில் மகாமகம் தொடா்பான ஆன்மிக பிரசாரப் பயணங்களை நாடு முழுவதும் கடந்தாண்டு முதல் மேற்கொண்டு வருகிறோம். 18 நாள்கள் ஆன்மிக மாநாடு நடத்தவும் ஏற்பாடு செய்து வருகிறோம் என்றாா் அவா்.
Advertisement
Advertisement
பேரமைப்பு நிறுவனா் சுவாமி இராமானந்த மஹராஜ், இணைச் செயலா் கோரக்ஷானந்தா, தென்பாரத கும்பமேளா குடந்தை மகாமக அறக்கட்டளை செயலா் வி. சத்தியநாராயணன், பொருளாளா் வேதம் முரளி, செயற்குழு உறுப்பினா் முரளி ஆகியோா் உடனிருந்தனா்.