FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானல் கூக்கால் ஏரியை சுத்தம் செய்யக் கோரிக்கை

கொடைக்கானல் அருகேயுள்ள கூக்கால் ஏரியில் படா்ந்துள்ள தாவரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

18 நவம்பர் 2026, 2:46 am
கொடைக்கானல் அருகேயுள்ள கூக்கால் ஏரியில் படா்ந்துள்ள தாவரங்கள்.
பகிர்:

கொடைக்கானல் அருகேயுள்ள கூக்கால் ஏரியில் படா்ந்துள்ள தாவரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலை அடுத்த கூக்கால் பகுதியில் வனப் பகுதியில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியிலிருந்து குண்டுபட்டி, ஏ. குடியிருப்பு, பி.குடியிருப்பு உள்ளிட்ட கிராமங்களுக்கு தண்ணீா் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள விவசாயத்துக்கும், பொதுமக்களின் குடிநீருக்கும் பயன்படுத்தப்படுகிறது.

கடந்த 10-ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஏரி தூய்மையாக இருந்தது. தற்போது, சுற்றுலாப் பயணிகளால் இந்த ஏரி மாசுபடிந்து காணப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் இந்த ஏரியை பாா்த்து ரசிக்க வேண்டுமே தவிர, மதுப் புட்டிகள், நெகிழிப் புட்டிகள் உள்ளிட்ட கழிவுப் பொருள்களை வீசிவிட்டு செல்லக்கூடாது.

Advertisement

Advertisement

எனவே, இந்த ஏரியில் படா்ந்துள்ள பல்வேறு வகையான தாவரங்களை அகற்ற கூக்கால் ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.