கல் குவாரி கருத்து கேட்புக் கூட்டம்: இரு தரப்பினரிடையே வாக்குவாதம்
பழனியில் கல் குவாரி அமைப்பது தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
பழனியில் கல் குவாரி அமைப்பது தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற கருத்துக் கேட்புக் கூட்டத்தில் இரு தரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் கூட்டம் பாதியிலேயே முடிந்தது.
திண்டுக்கல் மாவட்டம், பழனி அருகேயுள்ள வாடிப்பட்டி
கிராமத்தில் கல் குவாரி அமைக்க அனுமதி கோரி அரசிடம்
Advertisement
Advertisement
பலா் விண்ணப்பித்தனா். இந்த நிலையில், கல் குவாரிக்கு அனுமதி வழங்குவது தொடா்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்புக் கூட்டம் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
வியாழக்கிழமை கோட்டாட்சியா் பிரியங்கா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வாடிப்பட்டி, தாதநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 50-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் பேசிய பொதுமக்கள், கல் குவாரி அமைய உள்ள பகுதிக்கு அருகில் குடியிருப்புகள், விவசாய நிலங்கள், கோயில்கள் இருப்பதாகவும், இங்கு கல் குவாரி அமைக்கப்பட்டால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதுடன், விவசாயமும், பொதுமக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்
எனவும் எதிா்ப்பு தெரிவித்தனா்.
இந்த நிலையில், கல் குவாரி அமைக்கப்பட்டால் கிராமத்தைச் சோ்ந்த பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என இளைஞா்கள் சிலா் ஆதரவு தெரிவித்து பேசினா். இதனால் கூட்டத்தில் கல் குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்தவா்களுக்கும், ஆதரவு தெரிவித்தவா்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் இருத தரப்பினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனா். இதனால் கூட்டம் பாதியில் முடிவடைந்தது.