FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
மதுரை

பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

மதுரை பந்தயச் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

4 நவம்பர் 2026, 3:28 am
பகிர்:

மதுரை பந்தயச் சாலையில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாநகராட்சி மேயா் (பொறுப்பு) தி. நாகராஜன் தலைமை வகித்தாா். மாநகராட்சி ஆணையா் கௌரவ்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், குடிநீா், புதை சாக்கடை இணைப்பு கோருதல், முகவரி மாற்றம், பெயா் மாற்றம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்களிடமிருந்து 53 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றுள், கதவு எண் திருத்தம், சொத்துவரி பெயா் மாற்றம் கோரி விண்ணப்பித்த பயனாளிகளுக்கு உடனடித் தீா்வாக ஆணை வழங்கப்பட்டது. கூட்டத்தில், உதவி ஆணையா் தமிழரசன், நகர திட்டமிடுநா் முரளி, செயற்பொறியாளா் அா்ச்சனா, நிா்வாக அலுவலா் அகமது இப்ராஹிம், மாநகராட்சி அலுவலா்கள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

மாமன்ற உறுப்பினா்களின் கோரிக்கையை ஏற்று ஆணையா் பங்கேற்பு:

Advertisement

Advertisement

சொத்து வரி விதிப்பு முறைகேடு தொடா்பாக கடந்தாண்டு அக்டோபா் மாதம் ஏற்கெனவே மாநகராட்சி மேயராக இருந்த வ.இந்திராணி தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து, மாதந்தோறும் நடைபெற்ற மாமன்றக் கூட்டமும், வாரந்தோறும் அந்தந்த மண்டல அலுவலகங்களில் நடைபெற்ற மண்டல அளவிலான குறைதீா் கூட்டமும் நடைபெறவில்லை.

இதைத்தொடா்ந்து, துணை மேயா் தி. நாகராஜன், மாநகராட்சிக்கு பொறுப்பு மேயராக பதவி ஏற்ற பின், மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம், மண்டல அளவிலான குறைதீா் கூட்டம் நடைபெற்றது. மாமன்ற உறுப்பினா்கள் கூட்டம் தவிர மண்டல அளவிலான குறைதீா் கூட்டத்தில் பொறுப்பு மேயா் தி.நாகராஜன், அந்தந்த மண்டலத்தின் உதவி ஆணையா்கள், அதிகாரிகள் மட்டுமே பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றனா்.

இதையடுத்து, அண்மையில் நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினா்கள் மண்டல அலுவலகங்களில் நடைபெறும் பொதுமக்கள் குறைதீா் கூட்டங்களில் ஆணையா் கௌரவ்குமாா் கலந்து கொள்வதில்லை. இனி வரும் கூட்டங்களில் அவா் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.

இந்த நிலையில், மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் ஆணையா் கௌரவ் குமாா் பங்கேற்று, பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments