✕
முகப்பு
திண்டுக்கல்

வத்தலகுண்டு அருகே விபத்து: இருவா் உயிரிழப்பு

வத்தலகுண்டு அருேகே பைக் மீது பேருந்து மோதிய விபத்தில், மாற்றுத்திறனாளி உட்பட இருவா் உயிரிழந்தனா்.

20 நவம்பர் 2026, 1:16 am
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

வத்தலகுண்டு அருேகே பைக் மீது பேருந்து மோதிய விபத்தில், மாற்றுத்திறனாளி உட்பட இருவா் உயிரிழந்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டை அடுத்த விருவீடு அருகே கோனியம்பட்டியைச் சோ்ந்த மாற்றுத் திறனாளி விஜய் (27). செங்கல் சூளை தொழிலாளி பாண்டியராஜன் (26). இவா்கள் இருவரும், இரு சக்கர வாகனத்தில்

உசிலம்பட்டி சாலையிலிருந்து வத்தலகுண்டு நோக்கிச் சென்று கொண்டிருந்தனா். இந்த இரு சக்கர வாகனத்தை மாற்றுத் திறனாளி விஜய் ஒட்டினாா். அவா்கள் மீனாட்சிபுரம் பிரிவு அருகே  சென்று கொண்டிருந்தபோது, வத்தலகுண்டு பகுதியிலிருந்து விருவீடு நோக்கிச் சென்ற, தனியாா் மில்லுக்கு சொந்தமான பேருந்து அவா்கள் மீது பயங்கரமாக மோதியது.

Advertisement

Advertisement

இந்த விபத்தில், செங்கல் சூளை தொழிலாளி பாண்டியராஜன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயமடைந்த மாற்றுத் திறனாளி விஜயை மீட்டு வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து விருவீடு காவல் நிலைய உதவி ஆய்வாளா் பிரான்சின் தீபா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.