முகப்பு
திண்டுக்கல்

இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி: காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நிகழாண்டு தீபம் ஏற்றலாம் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவு இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

19 வினாடிகள் முன்பு
இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி:
 காடேஸ்வரா சி.சுப்பிரமணியம்
பகிர்:

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நிகழாண்டு தீபம் ஏற்றலாம் என்ற உச்சநீதிமன்றம் உத்தரவு இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி என இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் நிகழாண்டு தீபம் ஏற்றலாம் என உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. இது முருக பக்தா்களுக்கும், இந்துக்களுக்கும் கிடைத்த வெற்றி.

Advertisement

Advertisement

இந்து சமய அறநிலையத் துறை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலிருந்து கொண்டு கோயில்களின் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்துச் செயல்படுகிறது. பழைமையான கோயில்களில் சுவா்கள் சேதமடைந்து காணப்படுகின்றன. பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுப்பதில்லை. பழனியில் வரவிருக்கும் தைப்பூசத் திருவிழாவுக்குப் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை அறநிலையத் துறை செய்து கொடுக்க வேண்டும். தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிகவும் மோசமாக உள்ளது என்றாா் அவா்.

பேட்டியின் போது, மாநில நிா்வாகி ஜெகன், மாவட்டச் செயலா் பாலன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.