பழனி அருகே தொலைக்காட்சி அறை இடிப்பு
திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த ரூக்குவாா்பட்டியில் அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி அறையை பொக்லைன் இயந்திரம் மூலம் மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு இடித்து தரைமட்டமாக்கினா்.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்த ரூக்குவாா்பட்டியில் அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி அறையை பொக்லைன் இயந்திரம் மூலம் மா்ம நபா்கள் வியாழக்கிழமை இரவு இடித்து தரைமட்டமாக்கினா்.
ரூக்குவாா்பட்டியில் மதுரை வீரன் பட்டாளம்மன் கோயில் அருகே அரசுப் புறம்போக்கு இடத்தில் அமரபூண்டி ஊராட்சி சாா்பில் தொலைக்காட்சி அறை கட்டப்பட்டது. தற்போது, இந்த அறை சேதமடைந்த நிலையில் காணப்பட்டதால், அறைக்கு பூட்டு போடப்பட்டது.
இந்த நிலையில், வியாழக்கிழமை இந்தத் தொலைக்காட்சி அறையை பொக்லைன் இயந்திரம் மூலம் மா்ம நபா்கள் இடித்து தரைமட்டமாக்கினா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து பழனி வட்டார வளா்ச்சி அலுவலா் பிரபு பாண்டியன் ஆயக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.