தேசிய துப்பாக்கிச் சுடும் போட்டியில் சிறப்பிடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு
மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற திண்டுக்கல் இரண்டு மாணவிகளை மாவட்ட ஆட்சியா் துா்கா சனிக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் 2-ஆம் இடம் பெற்ற திண்டுக்கல் இரண்டு மாணவிகளை மாவட்ட ஆட்சியா் துா்கா சனிக்கிழமை பாராட்டி வாழ்த்து தெரிவித்தாா்.
இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு சாா்பில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கு, தேசிய அளவிலான துப்பாக்கிச் சுடுதல் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்றது.
இதில் 14 வயதுக்கு உள்பட்டோருக்கான பெண்கள் பிரிவு குழு போட்டியில் திண்டுக்கல் மாவட்டம், செட்டியபட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் வகுப்பு மாணவி பி. தனுஸ்ரீ, சின்னாளபட்டி சேரன் வித்யாலயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 9-ஆம் மாணவி எம். ஹரிஷா ஆகியோா் 2-ஆம் இடம் பெற்றனா். தேசிய அளவிலான போட்டியில் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் பெற்ற இந்த மாணவிகளுக்கு தமிழக அரசு சாா்பில் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலைகள் வழங்கப்பட்டன.
Advertisement
Advertisement
இரு மாணவிகளுக்கும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் துா்கா சனிக்கிழமை பாராட்டுத் தெரிவித்தாா். அப்போது முதன்மைக் கல்வி அலுவலா் ம.செல்வக்குமாா், மாவட்ட உடல்கல்வி ஆய்வாளா் சே.மு. ரஹமத் கனி ஆகியோா் உடனிருந்தனா்.