முகப்பு
திண்டுக்கல்

தாளையூத்து பகுதியில் நாளை மின் தடை

24 நவம்பர் 2026, 2:20 am
தாளையூத்து பகுதியில் 
நாளை மின் தடை
மின் தடை... - கோப்புப் படம்
பகிர்:

பழனி அருகே தாழையூத்து பகுதியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக புதன்கிழமை (நவ. 25) மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் தெரிவித்தாா்.

இதுகுறித்து மின்வாரிய உதவிச் செயற்பொறியாளா் லதா வெளியிட்ட அறிக்கை:

பழனியை அடுத்துள்ள தாளையூத்து துணை மின் நிலையத்தில் புதன்கிழமை பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால், இந்த மின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் மிடாப்பாடி, புஷ்பத்தூா், வயலூா், முத்துநாயக்கன்பட்டி, பசுபதிபுத்தூா், கண்டியகவுண்டன்புதூா், தாளையூத்து, நரிக்கல்பட்டி, மொட்டனூத்து, சின்னக்கலையமுத்தூா், அக்கரைப்பட்டி, சுக்கமநாயக்கன்பட்டி, சப்பளநாயக்கன்பட்டி, வி.கே.மில்ஸ், வன்னியா் வலசு, லட்சலப்பட்டி, தாதநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் புதன்கிழமை (நவ. 25) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement