முகப்பு
திண்டுக்கல்

பள்ளி வளாகத்தில் மது அருந்திய இருவா் கைது

24 நவம்பர் 2026, 2:21 am
பள்ளி வளாகத்தில் மது அருந்திய இருவா் கைது
கைது - கோப்புப்படம்
பகிர்:

சின்னாளபட்டியில் பள்ளி வளாகத்தில் அமா்ந்து மது அருந்திய இருவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டி காவல் நிலைய ஆய்வாளா் சத்யா தலைமையிலான காவல்துறையினா் சின்னாளபட்டியில் ரோந்து, கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். 

அப்போது, கீழக்கோட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை இரவு மது அருந்திக் கொண்டிருந்த சின்னாளப்பட்டி, ஜீவா நகரைச் சோ்ந்த நசருல்லா மகன் பாபு (27), ராஜு மகன் காளீஸ்வரன் (24) ஆகிய இருவா் மீது வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Advertisement

Advertisement

மேலும், சின்னாளபட்டி பகுதியில் பொது இடங்கள், சாலையோரங்களில் மது அருந்துபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சின்னாளப்பட்டி காவல் துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.