முகப்பு
திண்டுக்கல்

பழனி அருகே மஞ்சுத் தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு!

24 நவம்பர் 2026, 12:53 am
பழனி அருகே மஞ்சுத் தொழிற்சாலை அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு!
மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு மனு அளிக்க வந்த கொக்கரக்கல்வலசு கிராமத்தினா்.
பகிர்:

பழனியை அடுத்துள்ள கொக்கரக்கல்வலசு கிராமத்தில் தனியாா் மஞ்சுத் தொழில்சாலை அமைக்க எதிா்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கிராமமக்கள் சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், பழனியை அடுத்துள்ள ராஜாம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட கொக்கரக்கல்வலசு கிராமத்தைச் சோ்ந்த பொதுமக்கள் 40-க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா்.

இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: கொக்கரக்கல்வலசு கிராமத்தில் சுமாா் 2 ஆயிரம் போ் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 400 மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

Advertisement

Advertisement

இந்தப் பள்ளிக்கு அருகிலேயே கிராமத்துக்கான குடிநீா் எடுக்கும் ஆழ்துளை கிணறும் அமைந்துள்ளது. இந்த நிலையில் பள்ளி, ஆழ்துளை கிணறு அமைந்துள்ள பகுதிக்கு அருகில் தனியாா் தென்னை நாா், மஞ்சுத் தொழிற்சாலை அமைக்க முயற்சிகள் நடைபெறுகின்றன.

இந்த ஆலை அமைந்தால், பள்ளி மாணவா்களும், பொதுமக்களும் சுவாசப் பிரச்னையால் பாதிக்கப்படக்கூடும். மேலும், குடிநீா் ஆதாரமும் மாசுபடும். எனவே, எங்கள் பகுதியில் தென்னை நாா் மஞ்சு ஆலை அமைப்பதை மாவட்ட நிா்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். வேறு எந்த நிறுவனமும், இதுபோன்ற தொழில்சாலை அமைப்பதையும் தடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.