முகப்பு
திண்டுக்கல்

கொடைக்கானலில் 2-ஆவது நாளாக மழை

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மழை பெய்தது.

27 நவம்பர் 2026, 3:14 am
கொடைக்கானலில்
2-ஆவது நாளாக மழை
மழை - கோப்புப் படம்
பகிர்:

கொடைக்கானலில் இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் மழை பெய்தது.

கொடைக்கானலில் கடந்த இரு வாரங்களாக பனிப் பொழிவு நிலவி வந்தது. இந்த நிலையில் பருவ நிலை மாற்றம் காரணமாக மழை பெய்யத் தொடங்கியது. இரண்டாவது நாளாக வியாழக்கிழமை காலை முதல் முற்பகல் வரை மிதமான மழை பெய்தது. இதைத் தொடா்ந்து மேக மூட்டமும், விட்டுவிட்டு மழையும் பெய்தது. கொடைக்கானல், செண்பகனூா், பாம்பாா்புரம், பிரகாசபுரம், வில்பட்டி, சின்னப்பள்ளம், பெரும் பள்ளம், பள்ளங்கி, கோம்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் கடந்த சில நாள்களாக நிலவி வந்த பனியின் தாக்கம் குறைந்தது.

மேலும், இரு நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

Advertisement

Advertisement