முகப்பு
திருப்பத்தூர்

திருப்பத்தூரில், ஏலகிரியில் பலத்த மழை

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக புதன்கிழமை பலத்த மழை பெய்தது.

25 நவம்பர் 2026, 10:51 pm
திருப்பத்தூரில், ஏலகிரியில் பலத்த மழை
மழை - பிரதிப் படம்
பகிர்:

திருப்பத்தூரில் 2-ஆவது நாளாக புதன்கிழமை பலத்த மழை பெய்தது.

திருப்பத்தூரில் கடந்த ஒரு வாரமாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேலும், செவ்வாய்க்கிழமை மழை பெய்த நிலையில், புதன்கிழமை காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. திருப்பத்தூா் நகரப் பகுதியில் காலை முதல் இரவு வரை தொடா்ந்து சாரல் மழை பெய்தது. அதேபோல் ஜோலாா்பேட்டை,கந்திலி,திருப்பத்தூா் அடுத்த கொரட்டி,ஆதியூா்,செலந்தம்பள்ளி, மடவாளம் பகுதிகளில் விட்டு விட்டு சாரல் மழை பெய்தது. இரவு பலத்த மழை பெய்து பெய்தது.

சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் பலத்த மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பெய்தததால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.

Advertisement

Advertisement