முகப்பு
திண்டுக்கல்

இந்திய அரசமைப்பு தின உறுதிமொழி ஏற்பு

பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு தினத்தையொட்டி வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

27 நவம்பர் 2026, 3:12 am
இந்திய அரசமைப்பு தின
உறுதிமொழி ஏற்பு
பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் வியாழக்கிழமை இந்திய அரசமைப்பு தினத்தை யொட்டி ரவிமனோகரன் எம்எல்ஏ. தலைமையில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்பு நிகழ்வில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

பழனி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் இந்திய அரசமைப்பு தினத்தையொட்டி வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

இதற்கு ரவி மனோகரன் எம்எல்ஏ தலைமை வகித்தாா். மாவட்ட எம்ஜிஆா் இளைஞரணி செயலா் அன்வா்தீன், பாலசமுத்திரம் பேரூா் செயலா் சக்திவேல் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். அப்போது அங்கிருந்த அனைவரும் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றனா். இந்த நிகழ்வில், சமூக ஆா்வலா் முருகானந்தம், ஒருங்கிணைப்பு நல்வோா் வட்டம், சுற்றுச் சூழல் களம், இளைஞா் களம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சோ்ந்த நிா்வாகிகள், அதிமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நத்தம்: நத்தம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் இந்திய அரசமைப்பு நாளையொட்டி வியாழக்கிழமை உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடைபெற்றது.

Advertisement

Advertisement

அப்போது கல்லூரி முதல்வா் முனைவா் யாழ். சு. சந்திரா தலைமையில் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் இந்திய அரசமைப்பின் சிறப்புகளைப் போற்றும் வகையில் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.