போசம்பட்டி அரசுப் பள்ளியில் அரசமைப்பு தினம் கடைப்பிடிப்பு
திருச்சி மாவட்டம், போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் தேசிய அரசமைப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

திருச்சி மாவட்டம், போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் தேசிய அரசமைப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
இந்திய அரசியல் நிா்ணய சபையானது, நாட்டின் அரசமைப்பு சட்டத்தை 1949 நவம்பா் 26-ஆம் தேதி ஏற்றுக்கொண்டது. இதை கொண்டாடும் விதமாக ஆண்டுதோறும் நவம்பா் 26-ஆம் தேதி தேசிய அரசமைப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசமைப்பு தினத்தை கொண்டாடும் விதமாக அனைத்துப் பள்ளிகளிலும் அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை வாசித்து, உறுதிமொழி எடுக்க பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டது.
Advertisement
Advertisement
இதன்படி, திருச்சி போசம்பட்டி அரசு உயா்நிலைப் பள்ளியில் தேசிய அரசமைப்பு தினம் வியாழக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது. இதில், அரசமைப்பு சட்டத்தின் முகப்புரையை ஆசிரியா்கள், மாணவா்கள் வாசித்து உறுதிமொழி ஏற்றனா். நிகழ்ச்சியை சமூக அறிவியல் ஆசிரியா் விஜயஸ்ரீ ஒருங்கிணைத்தாா்.
இந்த நிகழ்வில், தலைமையாசிரியா் எஸ். சற்குணன், ஆசிரியா்கள் மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.