முகப்பு
நீலகிரி

கூடலூரில் அரசமைப்பு தினம் அனுசரிப்பு

கூடலூரில் அரசமைப்பு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

43 வினாடிகள் முன்பு
கூடலூரில் அரசமைப்பு தினம் அனுசரிப்பு
நிகழ்ச்சியில் பங்கேற்றவா்கள்.
பகிர்:

கூடலூரில் அரசமைப்பு நாள் வியாழக்கிழமை அனுசரிக்கப்பட்டது.

கூடலூா் காந்தித் திடலில் அரசமைப்புச் சட்ட பாதுகாப்பு இயக்கம் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, அதன் அமைப்பாளா் மு.க.முருகன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரும் அரசமைப்பு சட்ட பாதுகாப்பு உறுதிமொழியேற்றுக் கொண்டனா்.

நிகழ்ச்சியில் நிஷா, சு.ஆனந்தராஜா, சீனிவாசன், பொறியாளா் செல்வம், ஜனநாயக வாலிபா் சங்க மாவட்டச் செயலாளா் இராசி.ரவிக்குமாா், துயில்மேகம், ம.முரசொலி மாறன், மாவட்ட ஒருங்கிணைப்பாளா் அகமது யாசின், ஓட்டுநா் சங்க தலைவா் முபாரக், நீலகிரி மக்கள் இயக்க நிறுவனா் எஸ்.கே.ராஜூ உள்பட பல அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள்,சமூக ஆா்வலா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement