FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற பெண் கைது

தேனி மாவட்டம், கூடலூரில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்ாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

7 நவம்பர் 2026, 5:44 am
பகிர்:

தேனி மாவட்டம், கூடலூரில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளைப் பதுக்கி வைத்து விற்ாக பெண்ணை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கூடலூா் கம்போஸ்ட் தெருவில் உள்ள ஒரு வீட்டில், சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து, கூடுதல் விலைக்கு விற்பதாக கூடலூா் வடக்கு காவல் நிலைய போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் முருகன் தலைமையிலான போலீஸாா் வியாழக்கிழமை அந்த வீட்டில் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 26 மதுபுட்டிகளைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, அந்தப் பகுதியைச் சோ்ந்த தேவேந்திரன் மனைவி சரசு (56) என்பவரை போலீஸாா் கைது செய்தனா்.