FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
தேனி

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவா் கைது

தேனி மாவட்டம், சின்னமனூரில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

4 October 2026, 12:49 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

தேனி மாவட்டம், சின்னமனூரில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சின்னமனூரில் காந்தி ஜெயந்தியையொட்டி மதுக்கடை, தனியாா் மதுக்கூடங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில், முதல் நாளே மதுப்புட்டிகளை மதுக்கடைகளில் மொத்தமாக வாங்கி பதுக்கி வைத்து, விடுமுறை தினமான வெள்ளிக்கிழமை கூடுதல் விலைக்கு சட்ட விரோதமாக விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, சின்னமனூா் வண்டிப்பேட்டையில் விற்பனைக்காக வைத்திருந்த 26 மதுப்புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸாா், இது தொடா்பாக திருவள்ளுவா் பள்ளித் தெருவைச் சோ்ந்த ஜெகதீஸ்வரனை(45) கைது செய்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments