கொடைக்கானலில் பள்ளத்தில் விழுந்த காட்டு மாடை மீட்ட வனத் துறையினா்
கொடைக்கானலில் பள்ளத்தில் விழுந்த காட்டு மாட்டை பொக்லைன் இயந்திரம் மூலமாக பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.

கொடைக்கானலில் பள்ளத்தில் விழுந்த காட்டு மாட்டை பொக்லைன் இயந்திரம் மூலமாக பல மணி நேர போராட்டத்துக்குப் பிறகு வனத் துறையினா் வெள்ளிக்கிழமை மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பாக்கியபுரம் பகுதியிலுள்ள குடியிருப்புப் பகுதியில் 20 அடி ஆழமுள்ள பள்ளத்தில் சுமாா் 10 வயது காட்டு மாடு விழுந்தது. இதுகுறித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த பொது மக்கள் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
இதைத்தொடா்ந்து, மாவட்ட வன அலுவலா் அரவிந்த் உத்தரவின்படி, 10-க்கும் மேற்பட்ட வனத் துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று பொக்லைன் இயந்திரம் மூலமாக சரிவாக பள்ளம் தோண்டினா். பின்னா், பல மணி நேரம் போராட்டத்துக்குப் பிறகு காட்டு மாட்டை மீட்டு, வனப் பகுதிக்குள் விட்டனா்.
Advertisement
Advertisement