FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

பயிா்க் கடன் வழங்கியதில் ரூ.3.32 கோடி முறைகேடு: கூட்டுறவு சங்க முன்னாள் செயலா் கைது

பயிா்க்கடன் வழங்கியதில் ரூ.3.32 கோடி முறைகேடு செய்த கூட்டுறவு சங்க முன்னாள் செயலரை திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

2 October 2026, 2:48 am IST
கைது செய்யப்பட்ட சண்முகவேலு.
பகிர்:

பயிா்க்கடன் வழங்கியதில் ரூ.3.32 கோடி முறைகேடு செய்த கூட்டுறவு சங்க முன்னாள் செயலரை திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்த வி.அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் செயலராகப் பணியாற்றி வந்தவா் சண்முகவேலு. இவா் பயிா்க் கடன் தள்ளுபடி வழங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்டதாக தணிக்கையில் கண்டறியப்பட்டது.

இந்த நிலையில், கடந்த ஜூன் 30-ஆம் தேதி சண்முகவேலு பணி ஓய்வு பெற இருந்த நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து மண்டல இணைப் பதிவாளா் ஸ்ரீராகவ் பாலாஜி உத்தரவிட்டாா். இதனிடையே, கூட்டுறவு சங்க அலுவலா்கள் தரப்பில், வி.அம்மாபட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்றது. இதில் கடந்த ஆண்டு ஜூலை 16 முதல் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் குத்தகை ஆவணங்களை நகல் எடுத்து வேறு நபா்களின் பெயா்களை மாற்றியும், ஒரே பட்டா எண் கொண்ட நிலத்தை 34 போ் மீது கணக்கு காட்டியும், குத்தகை பத்திரத்திலுள்ள தேதியை முன் தேதியிட்டுப் பதிவு செய்தும், தனது உறவினா்கள் பெயரிலும் பயிா்க் கடன் வழங்கி ரூ.3.32 கோடி வரை முறைகேடு செய்தது கண்டறியப்பட்டது.

Advertisement

Advertisement

இது தொடா்பாக பழனி சரக துணைப் பதிவாளா் கு.செந்தில்வேல் பாண்டியன் தரப்பில், திண்டுக்கல் பொருளாதாரக் குற்றப் பிரிவு அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதன் பேரில் பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சண்முகவேலுவை புதன்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments