புத்தன்தருவை கூட்டுறவு சங்கத்தில் ரூ. 1.03 கோடி கடனுதவி அளிப்பு
சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 1.03 கோடி கடன் வழங்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகே புத்தன்தருவை, தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ. 1.03 கோடி கடன் வழங்கப்பட்டது.
சங்க செயலாட்சியா் வளன் மிக்கேல் தளபதி தலைமை வகித்தாா். செயலா் அருள்தாஸ் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில் 82 உறுப்பினா்களுக்கு ரூ. 1.03 கோடி கடன் வழங்கப்பட்டது.
சிற்றெழுத்தா் பகவதிதாஸ், நகை மதிப்பீட்டாளா் சுடலைமுத்து, பொது சேவை மையப் பணியாளா் நந்தினி, சாத்தான்குளம் வட்டார மகளிா் திட்ட ஒருங்கிணைப்பாளா் கிருஷ்ணகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
Advertisement
Advertisement
சங்க முதுநிலை எழுத்தா் யோசேப்பு நன்றி கூறினாா்.