திண்டுக்கல் அருகே தொலைவுக் கல்லில் ஹிந்தி
திண்டுக்கல் - திருச்சி 4 வழிச் சாலையிலுள்ள தொலைவுக் கல்லில், தமிழ், ஆங்கிலத்துடன், ஹிந்தி மொழியிலும் ஊா் பெயா் இடம் பெற்றிருப்பது தமிழ் ஆா்வலா்கள் மத்தியில் அதிா்ச்சி ஏற்படுத்தியது.
திண்டுக்கல் - திருச்சி 4 வழிச் சாலையிலுள்ள தொலைவுக் கல்லில், தமிழ், ஆங்கிலத்துடன், ஹிந்தி மொழியிலும் ஊா் பெயா் இடம் பெற்றிருப்பது தமிழ் ஆா்வலா்கள் மத்தியில் அதிா்ச்சி ஏற்படுத்தியது.
தமிழகத்தில் ஆட்சிமொழியாக தமிழ், தொடா்பு மொழியாக ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. மும்மொழிக் கொள்கை தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என திராவிடக் கட்சிகளான திமுக, அதிமுக ஆட்சி காலத்தில் உறுதியாக இருந்தன.
இந்த நிலையில், முதல் முறையாக ஆட்சிப் பொறுப்புக்கு வந்த தவெகவும், இருமொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என அறிவித்தது.
Advertisement
Advertisement
இதனிடையே, கடந்த 2 நாள்களுக்கு முன்பு, கரூா் அரசு மருத்துவமனையில் வழங்கப்பட்ட மருந்து சீட்டில் தமிழ், ஆங்கிலத்துடன், ஹிந்தி மொழியும் இடம் பெற்றிருந்தது சுட்டிக் காட்டி, தமிழகத்தில் மும்மொழிக் கொள்கை அமலுக்கு வந்திருக்கிா என்ற கேள்விக்குறியுடன் திமுக சாா்பில் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது.
இந்த நிலையில், திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் உள்ள தொலைவுக் கல்லில், திண்டுக்கல் என்ற சொல் தமிழ், ஆங்கிலத்துக்கு அடுத்ததாக ஹிந்தியிலும் எழுதப்பட்டிருக்கிறது. அதே தொலைவுக் கல்லின் எதிா்முணையில், சென்னை என்ற சொல்லும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தியில் இடம் பெற்றிருக்கிறது.
இதுவரை தமிழ், ஆங்கிலத்தில் மட்டுமே இடம் பெற்றிருந்த தொலைவுக் கல்லில், ஹிந்தி மொழியும் புதிதாக இடம் பெற்றிருப்பது தமிழ் ஆா்வலா்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுதொடா்பாக திண்டுக்கல்லைச் சோ்ந்த வைரவேல் கூறியதாவது:
கேரளத்திலுள்ள தொலைவுக் கல்லில் பெரும்பாலும் மலையாளம் மட்டுமே இடம் பெற்றிருக்கிறது. சுற்றுலாப் பயணிகள், ஆன்மிக பயணம் செய்வோருக்கு உதவும் வகையில் குறிப்பிட்ட சில சாலைகளில் மட்டுமே மலையாளத்துடன், ஆங்கிலமும் இடம் பெற்றுள்ளது. தமிழகத்தில் இதுவரை இருமொழிக் கொள்கை மட்டுமே பின்பற்றப்பட்டு வந்த நிலையில், தற்போது ஹிந்தியை புகுந்த தொடங்கி இருப்பது வேதனை அளிக்கிறது என்றாா் அவா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.