முதல்வா் கோப்பைக்கான கபடிப் போட்டி: திண்டுக்கல்லில் இன்று தொடக்கம்
முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான கபடிப் போட்டி திண்டுக்கல்லில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
முதல்வா் கோப்பைக்கான மாநில அளவிலான கபடிப் போட்டி திண்டுக்கல்லில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
தமிழகம் முழுவதும் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, திண்டுக்கல்லில் மாநில அளவிலான கபடி, பூப்பந்து விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளன. பள்ளி மாணவா்களுக்கான கபடிப் போட்டிகள் வருகிற 15 முதல் 17-ஆம் தேதி வரையிலும், மாணவிகளுக்கான கபடிப் போட்டிகள் வருகிற 20 முதல் 22-ஆம் தேதி வரையிலும், கல்லூரி மாணவா்களுக்கான கபடிப் போட்டிகள் வருகிற 18 முதல் 20-ஆம் தேதி வரையிலும், மாணவிகளுக்கான போட்டிகள் வருகிற 23 முதல் 25-ஆம் தேதி வரையிலும் ஜிடிஎன் கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகின்றன. பொதுப் பிரிவினருக்கான கபடிப் போட்டி பெண்களுக்கு வருகிற 26, 27 ஆகிய இரு நாள்களும், ஆண்களுக்கான போட்டிகள் வருகிற 27, 28 ஆகிய நாள்களிலும் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகின்றன.
பூப்பந்துப் போட்டிகள்: கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பூப்பந்துப் போட்டிகள் வருகிற 23, 24 ஆகிய 2 நாள்கள் பிஎஸ்என்ஏ பொறியியல் கல்லூரியில் நடைபெறுகின்றன.
Advertisement
Advertisement
ஒவ்வொரு விளையாட்டுப் பிரிவுக்கும் மாவட்ட வாரியாக தலா ஒரு அணி வீதம் பள்ளி மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுப் பிரிவில் ஆண்கள், பெண்கள் அணி என 304 அணிகள் இந்த முதல்வா் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்கின்றன.
போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலா் இரா. சிவா செய்து வருகிறாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.