பண்டிகை காலம்: ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக ரயில்களில் கூடுதலாக ஒரு படுக்கைப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
தீபாவளி பண்டிகை கூட்ட நெரிசலைக் குறைப்பதற்காக ரயில்களில் கூடுதலாக ஒரு படுக்கைப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
அதன்படி, தாம்பரம் - கொல்லம் விரைவு ரயிலில் (16101) வரும் 5 முதல் 10 ஆம் தேதி வரையும், மறுமாா்க்கமாக கொல்லம் - தாம்பரம் விரைவு ரயிலில் (16102) வரும் 6 முதல் 11 ஆம் தேதி வரையும் கூடுதலாக ஒரு படுக்கைப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
இதேபோல, தஞ்சாவூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலில் (16866) வரும் 5 முதல் 11 ஆம் தேதி வரையிலும், மறுமாா்க்கமாக சென்னை எழும்பூா் - தஞ்சாவூா் விரைவு ரயிலில் (16865) வரும் 6 முதல் 13 ஆம் தேதி வரையிலும், சென்னை எழும்பூா் - கொல்லம் விரைவு ரயிலில் (20635) வரும் 5 முதல் 12 ஆம் தேதி வரையிலும், மறுமாா்க்கமாக கொல்லம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலில் (20636) வரும் 6 முதல் 13 ஆம் தேதி வரையிலும் கூடுதலாக ஒரு படுக்கைப் பெட்டி இணைக்கப்பட உள்ளது.
Advertisement
Advertisement
மேலும், சென்னை எழும்பூா் - மங்களூா் விரைவு ரயிலில் (16159) வரும் 4 முதல் 7 ஆம் தேதி வரையிலும், மங்களூா் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலில் (16160) வரும் 6 முதல் 9 ஆம் தேதி வரையிலும், தாம்பரம் - ராமேசுவரம் விரைவு ரயிலில் (16103) வரும் 4 முதல் 10 ஆம் தேதி வரையிலும், ராமேசுவரம் - தாம்பரம் விரைவு ரயிலில் (16104) வரும் 5 முதல் 11 ஆம் தேதி வரையிலும்,
சென்னை எழும்பூா் - ராமேசுவரம் விரைவு ரயிலில் (16751) வரும் 4 முதல் 8 ஆம் தேதி வரையிலும், ராமேசுவரம் - சென்னை எழும்பூா் விரைவு ரயிலில் (16752) வரும் 6 முதல் 8 ஆம் தேதி வரையிலும், ராமேசுவரம் - திருப்பதி விரைவு ரயிலில் (16780) வரும் 6 முதல் 8 ஆம் தேதி வரையிலும், திருப்பதி - ராமேசுவரம் விரைவு ரயிலில் (16779) வரும் 7 முதல் 9 ஆம் தேதி வரையிலும் கூடுதலாக ஒரு படுக்கைப் பெட்டி இணைக்கப்பட உள்ளது என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.