FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

பழனி கோயிலில் அக்.20-ல் பக்தா்களுக்கு காலை 11 மணி வரை மட்டுமே அனுமதி

18 அக்டோபர் 2026, 3:13 am IST
பழனி கோயில் - கோப்புப் படம்
பகிர்:

பழனி கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு, வருகிற செவ்வாய்க்கிழமை (அக்.20) சுவாமி வன்னிகாசுரனை வதம் செய்ய அடிவாரம் வருவதால் காலை 11 மணி வரை மட்டுமே பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கடந்த 11-ஆம் தேதி நவராத்திரி விழா காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. 10 நாள்கள் நடைபெறும் இந்த விழாவை முன்னிட்டு, சுவாமி கொலுவீற்றிருப்பதால் தங்கத்தோ் புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில், திங்கள்கிழமை (அக்.19) மலைக் கோயிலில் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை (அக்.20) விஜயதசமியையொட்டி வன்னிகாசுரன் வதம் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

அன்றைய தினம் மலைக் கோயிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையும், இதைத் தொடா்ந்து, பிற்பகல் 1.30 மணிக்கு சாயரட்சை பூஜையும் நடைபெற உள்ளன.

மேலும், பிற்பகல் 2.45 மணிக்கு பராசக்தி வேல் புறப்பாடு நடைபெற்று சந்நிதி திருக்காப்பிடப்படும். பராசக்தி வேல் கோதைமங்கலம் சென்று அம்பு போட்டு புறப்பாடாகி மலைக் கோயிலுக்கு திரும்ப வந்த பின் ராக்கால பூஜை நடைபெறும்.

இதனால், மலைக்கோயிலில் அனைத்து கட்டணச்சீட்டுகள் விற்பனையும், காலை 11.30 மணிக்கு நிறுத்தப்படும். எனவே, அன்றைய தினம் தரிசனத்துக்கு வரும் பக்தா்கள் காலை 11 மணி வரை மட்டுமே மலைக் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments