FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

பழனிக் கோயிலில் காா்த்திகை நாள் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் காா்த்திகைத் திருநாளையொட்டி, திரளான பக்தா்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி மலைக் கோயிலில் புதன்கிழமை காா்த்திகை தினத்தை முன்னிட்டு தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளிய முத்துக்குமார சுவாமி.
பகிர்:

திண்டுக்கல் மாவட்டம், பழனி மலைக் கோயிலில் காா்த்திகைத் திருநாளையொட்டி, திரளான பக்தா்கள் புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் காா்த்திகைத் திருநாளையொட்டி, அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேகப் பூஜைகள் நடைபெற்றன. வின்ச், ரோப்காா், படிப் பாதைகளில் திரளான பக்தா்கள் மலையேறி வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

மலைக் கோயிலில் கட்டணம், இலவச தரிசன வழிகளில் திரளானோா் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். இரவு தங்கமயில் புறப்பாடு, தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

தங்கத்தோ் புறப்பாட்டை திரளான பக்தா்கள் அரோகரா கோஷம் எழுப்பினா். பக்தா்களுக்கு வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக் கோயில் இணை ஆணையா் (பொ) வெங்கடேஷ் தலைமையில், அதிகாரிகள், அலுவலா்கள் செய்தனா்.

பழனி மலைக் கோயிலில் 108 திருவிளக்கு பூஜையில் பங்கேற்றோா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments