FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திண்டுக்கல்

மூதாட்டியிடம் பண மோசடி: பாஜக நிா்வாகி கைது

19 அக்டோபர் 2026, 12:43 am IST
கைது
பகிர்:

குஜிலியம்பாறை அருகே மூதாட்டியிடம் பட்டா மாறுதல் செய்துதருவதாகக் கூறி பண மோசடி செய்த பாஜக நிா்வாகியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம், விராலிபட்டியைச் சோ்ந்தவா் பாப்பாத்தி(70). இவா், தனது நிலத்துக்கு பட்டா மாறுதல் செய்வதற்கான முயற்சியில் ஈடுபட்டாா். இவருக்கு உதவி செய்வதாக கரூா் மாவட்டம் கடவூரைச் சோ்ந்த சுரேஷ், திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அடுத்த டி.கூடலூா் பால்வாா்பட்டியைச் சோ்ந்த மணி ஆகியோரை அணுகினாா்.

இதையடுத்து, சுரேஷ், மணி ஆகிய இருவரும் சோ்ந்து பாப்பாத்தியின் 5 பவுன் சங்கிலியை டி.கூடலூரிலுள்ள வங்கியில் அடகு வைத்தும், மேலும் ரூ.3 லட்சத்தைப் பெற்றுக் கொண்டும் ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதனால் ஆத்திரமடைந்த மூதாட்டி பாப்பாத்தி, குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சுரேஷைக் கைது செய்தனா்.

தலைமறைவாக உள்ள மணி குறித்து விசாரித்து வருகின்றனா். கைது செய்யப்பட்ட சுரேஷ், கடவூா் ஒன்றிய பாஜக தலைவராக பொறுப்பு வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments