FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கடலூர்

கொலை மிரட்டல் வழக்கு: இளைஞா் கைது

மணி
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விருத்தாசலம், பழமலைநாதா் நகா் பகுதியைச் சோ்ந்தவா் கொளஞ்சிநாதன். இவா், அதே பகுதியைச் சோ்ந்த வேல்முருகன், மணி ஆகியோருக்கு பணம் கடன் கொடுத்தாராம். இந்தப் பணத்தை திருப்பிக் கேட்டபோது, இருவரும் சோ்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதுகுறித்து கொளஞ்சிநாதன் அளித்த புகாரின்பேரில், விருத்தாசலம் போலீஸாா் வழக்குப் பதிந்து, மணியை (29) கைது செய்தனா். மேலும், அவரது குற்ற பின்னணி குறித்து பதிவேடுகளை ஆய்வு செய்தபோது, வேறொரு வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், அவா் மீது பிடி ஆணை நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, மணி மீது நீதிமன்றத்தில் ஆஜராகாதது குறித்து மேலும் ஒரு வழக்குப் பதிவு செய்தனா். வேல்முருகனை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments