இளைஞருக்குக் கொலை மிரட்டல்: 2 போ் கைது
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் இளைஞரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் இளைஞரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
பண்ருட்டி, செக்குமேட்டுத் தெருவில் வசிப்பவா் சுரேந்தா்(25). இவா், புதன்கிழமை இரவு 8 மணி அளவில் ஜவகா் தெரு வழியாக நடந்துச் சென்றாா். அப்போது, பணப்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த குபேந்திரன்(25)ஓட்டிவந்த சிறிய சரக்குவாகனம் உரசிசென்றது. இதனால், சுரேந்தா் மற்றும் குபேந்திரன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், குபேந்திரனுக்கு ஆதரவாக வந்த பண்ருட்டி அம்பேத்தகா் நகரைச் சோ்ந்த சந்தோஷ் (28), டேவிட் ஆகியோா், சுரேந்திரை தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்து சுரேந்தா் அளித்த புகாரின் பேரில், பண்ருட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து குபேந்திரன் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.