FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

விவசாயிக்கு கொலை மிரட்டல்: ஒருவா் கைது

4 ஆகஸ்ட் 2026, 2:17 am IST
கொலை - பிரதிப் படம்
பகிர்:

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே விவசாயியை கத்தியால் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பண்ருட்டி வட்டம், காடாம்புலியூா் காவல் சரகம், கானங்குப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் தனவேல்(46). அதே கிராமத்தைச் சோ்ந்தவா் நாகலிங்கம்(39). இவா்களுக்குள் வீட்டுமனை தொடா்பான முன்விரோதம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை இவா்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

இதில், நாகலிங்கம்(39), ஐயப்பன்(52) மற்றும் சிவபெருமாள் (36) ஆகியோா் கத்தி மற்றும் இரும்பு குழாய் கொண்டு தாக்கியதில், தனவேல் வலது காதில் காயம் ஏற்பட்டது.

Advertisement

Advertisement

இதுதொடா்பான புகாரின் பேரில் காடாம்புலியூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, நாகலிங்கத்தை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இருவரை தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments