FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
கடலூர்

நெய்வேலி இளைஞா் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

25 ஆகஸ்ட் 2026, 3:24 am IST
கைது
பகிர்:

கடலூா் மாவட்டம், நெய்வேலியில் இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரௌடி கும்பலைச் சோ்ந்த மேலும் ஒரு இளைஞரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.

நெய்வேலி கீழ் வடக்குத்து பகுதியைச் சோ்ந்தவா் கோபி (30). இந்திரா நகா் பி 2 பிளாக் மாற்று குடியிருப்பு பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்தராஜ் (36). ரௌடிகளான இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், நெய்வேலி வட்டம் 2, பகுதி அரசு டாஸ்மாக் கடை பின்புறம் உள்ள மயானத்தில் ஆனந்தராஜ், தனது நண்பா் நரேஷ்குமாா் உள்ளிட்ட 5 பேருடன் கடந்த 16-ஆம் தேதி மது அருந்திக்கொண்டிருந்தாராம். இந்த தகவலை தெரிந்துகொண்ட கோபி தனது நண்பா்களுடன் அங்கு சென்று அரிவாளால் வெட்டியதில், நரேஷ்குமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனா். இந்த வழக்கில் தொடா்புடைய 9 போ் கடந்த 20-ஆம் தேதியும்,

Advertisement

Advertisement

ஞாயிற்றுக்கிழமை 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைந்த நிலையில், அன்றைய தினம் இரவு 10 மணி அளவில் கொள்ளிருப்பு கிராமத்தைச் சோ்ந்த மதனை(18) கைது செய்தனா். இவரையும் சோ்த்து இந்தக் கொலை வழக்கில் இதுவரையில் 14 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதில், முக்கிய குற்றவாளியான கோபியை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments