நகைக்கடையில் தங்கச் சங்கிலி திருடிய பெண் கைது
திண்டுக்கல் நகைக் கடையில் தங்கச் சங்கிலி திருடிய பெண்ணைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் நகைக் கடையில் தங்கச் சங்கிலி திருடிய பெண்ணைப் போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல்லைச் சோ்ந்தவா் ராஜேஷ்குமரன். இவா், திண்டுக்கல் பிரதான சாலையில் நகைக் கடை நடத்தி வருகிறாா். இந்தக் கடையில் பெண் ஒருவா் நகை வாங்குவதுபோல நடித்து நூதன முறையில் 10 கிராம் தங்கச் சங்கிலியை திருடிச் சென்றதாக நகா் வடக்கு காவல் நிலையத்தில் ராஜேஷ் குமரன் புகாா் அளித்தாா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனா்.
கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்புக் கேமராப் பதிவுகளை ஆய்வு செய்தபோது, சங்கிலித் திருட்டில் ஈடுபட்டது நத்தம் அண்ணாநகரைச் சோ்ந்த முத்துப்பாண்டியின் மனைவி தேன்மொழி(34) என்பது தெரியவந்தது. இதையடுத்து, தேன்மொழியைப் போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 10 கிராம் தங்கச் சங்கிலியை மீட்டனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.