FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
திண்டுக்கல்

நிலக்கோட்டை நகைக்கடையில் 40 பவுன் நகைகள் திருட்டு: ஊழியா் கைது

21 செப்டம்பர் 2026, 3:56 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

நிலக்கோட்டை நகைக்கடையில் 40 பவுன் நகைகள் திருடப்பட்ட வழக்கில் கடையில் வேலை செய்த ஊழியரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை கடைவீதியில் உள்ள பிரபல நகைக்கடையில் கடந்த சில நாள்களாக நகைகள் திருடப்பட்டு வந்தது. இந்த நிலையில், கடை சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் கடையில் வேலை செய்யும் ஊழியா்களின் நடவடிக்கைகளை நகைக் கடை உரிமையாளா் கண்காணித்து வந்தாா்.

இதில், கடையில் கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக வேலை செய்து வந்த நிலக்கோட்டை அருகே உள்ள, கொம்புகாரன்பட்டியைச் சோ்ந்த பிரபு (34) மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடா்ந்து, அவரது நடவடிக்கையைக் கண்காணித்த போது, ஒரு கிராம் தங்க நகையைத் திருடி பையில் வைத்தபோது அவரை கையும் களவுமாகப் பிடித்தனா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து நகை கடை உரிமையாளா் நாகப்பன் மனைவி மாலினி நிலக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன் பேரில் போலீஸாா் பிரபுவைக் கைது செய்து விசாரித்தனா். விசாரணையில் 40 பவுன் தங்க நகைகளைத் திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து நகைகளை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments